September 6, 2026

அஷேரா – 25

25 குளிர், பூச்சியத்திற்குக் கீழே எட்டு அல்லது பத்துக்குப் போயிருக்க வேண்டும். மோர்கார்த்தென் நினைவாலயத்திற்கு ஏறும் கருங்கல் பாதையில் கனத்த இருள். அருள்குமரன் மூச்சிரைக்க மூச்சிரைக்க ஏறினான். கை கால்கள் திடீர் திடீரென்று குளிரில் உறைந்துவிடுவதைப் போலவும் கஸ்ரப்பட்டுப் பிரித்துக் கொள்வதாகவும் அவனுக்குத் தோன்றிற்று. ‘அற்புதம் குற்றமற்ற கை என்றா சொன்னார்?’ எவ்வளவு ஆறுதலாக இருந்திருக்க வேண்டும். எதையோ வென்றுவிட்டதைப் போல. ஆனால் அப்படி இல்லையே. அவன் விலுக் என்று அவரிடமிருந்து கையை இழுத்தான். “சாப்பிட வாடா.” […]
◷ 10 நிமிட வாசிப்புமுழுவதும் படிக்க →

அண்மைய எழுத்துகள்

மழையும் வானத்தின் பழைய துயரமும்

சில புனைவுகளை வாசிக்கும்போது, ஒரு காட்சியை அதனுடைய இயல்பிலேயே இருக்கவிட எழுத்தாளருக்கே நம்பிக்கை இல்லை என்பது போலத் தோன்றுகிறது. ஒரு மரம் மரமாக நிற்பதற்கு முன்பே அது காலத்தின் அடையாளமாகிவிடுகிறது. மழை பெய்யத் தொடங்குவதற்குள் அது ஒருவரின் உள்மனக் கலக்கத்தைச் சுமக்கிறது.…

அஷேரா – 24

தலைக்குத் தோய்ந்துவிட்டு உடலைத் துவட்டியபடி குளியல் அறையிலிருந்து அற்புதம் வெளியேறினார். அவர் பயன்படுத்திய போர்வையையும் தலையணை உறைகளையும் துவைப்பதற்காகக் கூடைக்குள் அடைந்துகொண்டிருந்த அருள்குமரன் அவரை நிமிர்ந்து பார்த்தான். நெஞ்சிலும் வயிற்றிலும் அம்மிக் கல் பொளிந்த மாதிரி அம்மைத் தழும்புகள். பாவம். அம்மைப்…

அஷேரா – 23

கொழும்பு மாநகர சபை மைதானத்தில் தேர்தல் பிரச்சார மேடையில் குண்டு வெடித்துவிட்டது என்ற செய்தியை அருள்குமரன் பார்த்துக்கொண்டிருந்த ‘மர்மதேசம்’ தொடருக்கு நடுவில் திடீரென்று ஒளிபரப்பினார்கள். இரவு பத்து மணியிருக்கும். இப்பொழுதுதான் வீட்டுக்கார அம்மா ‘சித்தி’ நாடகம் பார்த்துவிட்டு தூங்கப் போயிருந்தாள். நல்ல…

அஷேரா – 22

“அரங்கன்  வந்திட்டார்.” என்றாள் அபர்ணா. அதற்குப் பிறகும் அவள் ஏதோ பேசிக்கொண்டுதான் போனாள், சிறு சலனம் கூட இல்லாமல். அருள்குமரனுக்குத்தான் சட்டென்று இழை அறுந்துவிட்டதைப்போல தோன்றிற்று. அவன் வெறுமனே காதில் தொலைபேசியைப் பிடித்து வைத்துக்கொண்டு நின்றான். அது எப்பிடிச் சாத்தியம்? மின்னாமல்…

அஷேரா – 21

கொழும்பில் தரையிறங்கியது விமானம். சென்னையில் அது வானம் ஏறியபோது தோன்றிய ‘அப்பாடா..’ என்ற உணர்வெல்லாம் கொஞ்ச நேரத்திற்குத்தான். இப்போது கொழும்பைப் பற்றிய யோசனைகள். திட்டங்களில் ஏதும் கசிந்திருந்தால் வாசலில் வைத்தே கைது செய்வார்களோ? அப்படி ஏதும் நடந்தால் அதற்குப் பிறகு அவன்…

விமர்சனங்களிலிருந்து

மங்கை செல்வம்

அழுகை, அச்சம், கையாலாகாத கோபம், ஒரு விதமான சுயவெறுப்பு எல்லாமுமாக ஆதிரையை முடித்தேன். எல்லாருக்கும் நியாயம் இருப்பது போல் ஆனால் எதற்குமே அர்த்தம் இல்லாதது போலும்… நண்பரொருவர் சொல்லியது போல் வன்னியின் எளிய மக்கள்படும் துன்பத்தை விட அவர்கள் எல்லோராலும் நடத்தப்படும் அவலம். Racial purity ethnic supremacy எல்லாம் எவ்வளவு குரூரமும் அபத்தமுமானவை. ஆற்றொழுக்காக செல்ல வேண்டிய எவ்வளவு பேருடைய வாழ்க்கையும், உறவுகளும், உணர்வுகளும் நம்பிக்கைகளும் கருகி போயிருக்கு. எங்குமே நிலைத்து வாழ முடியாம எவ்வளவு துரத்தப்படுறாங்க. இது எங்கே நடந்தாலும் யாருக்கு நடந்தாலும் மனதை கொல்லுகிற விஷயம்தானே. சக போராளிகளா இருந்த வெள்ளையன் கண்ணிவெடிகளை அகற்றி வாழ்க்கையை தொடர, இனிதனை புலம்பெயர வைக்க 40 லட்சங்களை தயார் செய்ய ஒரு குடும்பமே இருக்கிறது. Traumatizing இப்போது வந்த வெள்ளத்தப்போ டிவியில யாரோ ஒரு மிடில் க்லாஸ் புண்ணியவதி ‘நாளு நாளா யாருமே இந்த பக்கம் வரல. பிச்சைக்காரங்களாட்டம் நிக்கிறோம்’ அப்படின்னு சொன்னுச்சு. பிச்சைக்காரங்களாட்டம் நிக்கிறதுன்னா என்னன்னு தெரியுமான்னே தெரியல. சினிமாவுல எல்லாம் தமிழீழ…
முழுவதும் வாசிக்க →
புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்யுங்கள்.

தமிழ்ப் பண்பாட்டில் போர் இல்லாமலாகி இருநூறாண்டுக் காலமாகிறது. ஆகவேதான் நம் மொழியில் இத்தனை போர்க் கூச்சல்கள். ரத்தமும் கண்ணீரும் தெறித்த ஒரு போர்க் காலகட்டத்தின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஆதிரை, போர் என்றால் என்ன என்று காட்டுகிறது. தமிழில் போர் குறித்து எழுதப்பட்ட நாவல்களில் இதுவே முதன்மையானது

ஜெயமோகன்

எள்ளலும் துல்லியமும் கூடிய மொழியும், நாவல் கட்டமைப்பைத் தேர்ந்த தொழில் நுட்பத்துடன் கட்டியிருப்பதும் ஆறாவடு நாவலின் சிறப்புகள். குறிப்பாக நாவலின் கதைசொல்லும் முறையும் கூர்மையான மொழியும் என்னை ஆச்சரியப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. தமிழ் இலக்கியத்துக்கு இன்னொரு நுட்பமான கதைசொல்லி கிடைத்துவிட்டார்

ஷோபா சக்தி

ஆதிரை, நாவல் கலையின் சவாலை ஏற்றுக்கொண்ட ஒரு படைப்பு. முப்பதாண்டு கால ஈழப் போர்ச் சூழலில் தமிழ் மக்கள் பட்ட அவமானங்கள், சிதைவுகள், சாதிய முரண்கள் என வாழ்வை விரிந்த தளத்தில் சொல்கிறது ஆதிரை.

சு. வேணுகோபால்